Sunday 12th of May 2024 12:30:44 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
உயிரிழப்புக்கள் 20 ஆயிரத்தைக் கடந்த  நான்காவது நாடாக பதிவானது பிரான்ஸ்!

உயிரிழப்புக்கள் 20 ஆயிரத்தைக் கடந்த நான்காவது நாடாக பதிவானது பிரான்ஸ்!


கொரோனா வைரஸால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ் இடம்பிடித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 20 ஆயிரத்துக்கு அதிகமான உயிரிழப்புக்களை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் பிரான்ஸில் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நேற்று 547 போ் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அங்கு இறப்புக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்து 20,265 ஆக பதிவாகியுள்ளது.

எனினும் மருத்தவமனைகளில் உள்ள தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை பிரான்ஸில் தொடா்ந்து குறைந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக பிரான்ஸ் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் சமூக முடக்கல் நடவடிக்கைகளை மே 11 முதல் தளா்த்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

கடும் நெருக்கடியில் இருந்து பிரான்ஸ் மீண்டு வருவதாக பிரான்ஸ் அரசின் தலைமை சுகாதார அதிகாரி ஜெரோம் சொலமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏப்ரல் 8 ஆம் திகதி 7,148 ஆக இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. நேற்று திங்கட்கிழமை 5,683 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளா்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவது மருத்துவமனைகள் மீதான அழுத்தங்கள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறியாக உள்ளது. இது ஊக்கமளிக்கும் சமிக்ஞைகளில் ஒன்றாகும் என பிரதமர் எட்வார்ட் பிலிப் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறினார்.

எனினும் மே-11 சமூக முடக்கல் தளா்த்தப்பட்டாலும் முன்னரைப் போன்ற இயல்பாக நடமாட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனவும் அவா் தெரிவித்தார்.

வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கட்டறிய இன்னும் அதிக காலம் எடுக்கலாம். அதுவரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமா் வலியுறுத்தினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE